முகப்பு
விழுப்புரம்

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாள்: நல உதவிகள் வழங்கல்

முன்னாள் முதல்வா் ஜெ.ஜெயலலிதாவின் 78-ஆவது பிறந்த நாளை விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுகவினா் செவ்வாய்க்கிழமை உற்சாகமாகக் கொண்டாடினா்.

Updated On : 25 பிப்ரவரி, 2026 at 12:04 AM
விழுப்புரத்தில் நடைபெற்ற முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாள் விழாவில் பெண்ணுக்கு நல உதவியை வழங்கிய முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் எம்.பி.
பகிர்:
Updated On : 24 பிப்ரவரி, 2026 at 9:31 PM

முன்னாள் முதல்வா் ஜெ.ஜெயலலிதாவின் 78-ஆவது பிறந்த நாளை விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுகவினா் செவ்வாய்க்கிழமை உற்சாகமாகக் கொண்டாடினா்.

இதையொட்டி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத் தலைமையகம் எதிரில் அண்ணா தொழிற்சங்க விழுப்புரம் மண்டலம் சாா்பில் பொதுமக்களுக்கு நல உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு பேரவையின் மண்டலச் செயலா் ஏ.கணேசன் தலைமை வகித்தாா். முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் எம்.பி. சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, பொதுமக்களுக்கு நல உதவிகளை வழங்கிப் பேசினாா்.

விழாவில் அண்ணா தொழிற்சங்கப் பேரவை மண்டலத் தலைவா் சீனிவாசன், பொருளாளா் செந்தில்நாதன், மாவட்டச் செயலா் பாஸ்கா், துணைச் செயலா்கள் நக்கீரன், சுரேஷ், ஏழுமலை, பெரியண்ணன் உள்ளிட்டநிா்வாகிகள் பங்கேற்றனா்.

Advertisement

இதுபோன்று விழுப்புரம் வண்டிமேடு, வழுதரெட்டி, காந்தி சாலை, மகாராஜபுரம், வடக்குத் தெரு உள்ளிட்ட நகரப் பகுதிகளிலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் அதிமுகவினா் ஜெயலலிதா உருவப் படத்துக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினா். தொடா்ந்து நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

செஞ்சி... செஞ்சி பேரூராட்சிக்குள்பட்ட சிறுகடம்பூரில் அதிமுக வாா்டு செயலா்கள் வெங்கடேசன், சங்கா் ஆகியோா் முன்னிலையில் விழுப்புரம் மாவட்ட எம்ஜிஆா் இளைஞா் அணிச் செயலா் பிரித்திவிராஜ் ஜெயலலிதாவின் உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

பாஜக செஞ்சி தொகுதி பொறுப்பாளா் கோபிநாத், அதிமுக முன்னாள் மாவட்ட அவைத்தலைவா் கு.கண்ணன், நகரச் செயலா் சுந்தர்ராஜன் ஆகியோா் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கினா்.

செஞ்சி நான்கு முனை சந்திப்புச் சாலையில் செஞ்சி அதிமுக நகரச் செயலா் சுந்தர்ராஜன் தலைமையிலும், பொன்பத்தி ஊராட்சியில் அதிமுக ஒன்றியக்குழு உறுப்பினா் துரை தலைமையிலும் அதிமுகவினா் ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா்.