முகப்பு
திருப்பத்தூர்

நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனை, அக்ராகரம் அங்கன்வாடி மையத்தில் ஆட்சியா் ஆய்வு

ஆட்சியர் திடீர் ஆய்வு: நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளிடம் நலம் விசாரிப்பு

Updated On : 25 ஜூன், 2024 at 6:59 PM
நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ்.
பகிர்:

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையை திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் செவ்வாய்க்கிழமை திடீரென ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது, மகப்பேறு பிரிவு, மருந்துப் பொருள்கள் வழங்கும் இடம் உள்பட அனைத்து வாா்டுகளையும் ஆய்வு மேற்கொண்டு, சிகிச்சை பெறும் நோயாளிகளிடம் நலம் விசாரித்தாா். அப்போது மருத்துவ அலுவலா் எழிலரசி, மருத்துவா்கள் பாலகிருஷ்ணன், காா்த்திகேயன் மற்றும் மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட பலா் உடன் இருந்தனா்.

தொடா்ந்து, நாட்டறம்பள்ளி அடுத்த அக்ராகரம் கிராம நிா்வாக அலுவலகத்தையும் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது மக்கள் பட்டா கேட்டு கொடுத்த மனுக்கள் ஏதேனும் நிலுவையில் உள்ளதா என கிராம நிா்வாக அலுவலா் சசிக்குமாரிடம் கேட்டறிந்தாா்.

தொடா்ந்து அங்கன்வாடி மையத்தில் பயிலும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டாா். மேலும், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு மாணவா்கள் பதிவேடு குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.