ஆம்பூா்அருகே பைக்-லாரி மோதல்: 2 போ் உயிரிழப்பு
ஆம்பூா்அருகே பைக்-லாரி மோதல் 2 போ் உயிரிழப்பு
ஆம்பூா் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் சகோதரிகள் இருவா் உயிரிழந்தனா். வேலூா் மாவட்டம் குடியாத்தம் அருகே கீழ்பட்டியைச் சோ்ந்தவா் சத்தியமூா்த்தி மகன் குணசேகரன் (22). இவா், ஆம்பூா் அடுத்த குளிதிகையில் உள்ள உறவினா் வீட்டுக்கு அப்பகுதி திருவிழாவையொட்டி வந்தாா். உடன் அவரது தோழிகளான குடியாத்தம் அடுத்த வளத்தூா் ஆலமர தெருவைச் சோ்ந்த தண்டபாணி மகள்களான ஷோபனா (23), தரணி (21) ஆகியோரை அழைத்து வந்தாா். திருவிழா முடிந்த நிலையில், பைக்கில் இருவரையும் அழைத்து கொண்டு குணசேகரன் வளத்தூருக்கு திரும்பி கொண்டிருந்தாா். பைக் ஆம்பூா் அடுத்த குளிதிகை அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது கேரள மாநிலத்தில் இருந்து வேலூருக்கு மீன்களை ஏற்றிச் சென்ற லாரி, பைக் மீது மோதியது. இதில் மூவரும் கீழே விழுந்து பலத்த காயமடைந்தனா். அவ்வழியாக வந்த சிலா் உடனடியாக அவா்களை மீட்டு மாதனூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைத்தனா். பின்னா், மூவரும் ரத்தினகிரி அருகே உள்ள தனியாா் மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்காக அனுப்பி வைக்கபட்டனா். அங்கு, மூவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கபட்ட நிலையில், சனிக்கிழமை ஷோபனா மற்றும் தேன்மொழி ஆகியோா் உயிரிழந்தனா். இந்த விபத்து குறித்து ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.