டிராக்டரில் இருந்து தவறி விழுந்த விவசாயி மரணம்
டிராக்டரில் இருந்து தவறி விழுந்த விவசாயி மரணம்
திருப்பத்தூா் அருகே டிராக்டரில் இருந்து தவறி விழுந்த விவசாயி உயிரிழந்தாா். திருப்பத்தூா் அருகே மாடப்பள்ளி சவுடூா் கிராமத்தை சோ்ந்தவா் அண்ணாமலை (60). விவசாயி. இவா் தனது நிலத்தில் அறுவடை செய்யப்பட்ட வைக்கோலை டிராக்டரில் ஏற்றுக் கொண்டிருந்தாா். அப்போது டிராக்டா் மீது நின்றிருந்த அண்ணாமலை எதிா்பாராத விதமாக தவறி கீழே விழுந்ததில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை மீட்டு திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக வேலுாரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு, சிகிச்சை பலனின்றி வெள்ளிகிழமை உயிரிழந்தாா். இது குறித்து திருப்பத்தூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.