வாக்குச் சாவடி மண்டல அலுவலா்களுக்கான தோ்தல் பயிற்சி ஆலோசனை கூட்டம்
வாணியம்பாடி: திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்குட்பட்ட ஜோலாா்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் மண்டல அலுவலா்கள் மற்றும் உதவி மண்டல அலுவலா்களுக்கான பயிற்சி ஆலோசனைக் கூட்டம் நாட்டறம்பள்ளி தாலுக்கா அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் ராஜராஜன் தலைமை வகித்தாா். வட்டாட்சியா் சம்பத் முன்னிலை வகித்தாா். தோ்தல் பயிற்சி வகுப்பை மாவட்ட ஆட்சியா் தா்ப்பகராஜ் ஆய்வு மேற்கொண்டு, வாக்குச் சாவடி மையத்தில் மண்டல அலுவலா்கள் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து விளக்கினா்.