முகப்பு
திருப்பத்தூர்

தற்காலிக செவிலியா் கிணற்றில் குதித்து தற்கொலை

Updated On : 21 மார்ச், 2024 at 12:00 AM
பகிர்:
Updated On : 20 மார்ச், 2024 at 9:14 PM

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே ஆரம்ப சுகாதார நிலைய தற்காலிக செவிலியா் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துக் கொண்டாா். வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் காமராஜா் நகா் பகுதியை சோ்ந்த மதுபிரியா (30). இவா் நிம்மியம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்காலிக செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளாா்.

இவருக்கும் அரூா் பகுதியை சோ்ந்த பாண்டியன் என்பவருக்கும் திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனா். இந்நிலையில் தம்பதி இடையே கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனா். மதுபிரியா ஆலங்காயம் பகுதியில் உள்ள தன் தாய் வீட்டில் தங்கி இருந்து வேலைக்கு சென்று வந்துள்ளாா்.

இந்நிலையில் புதன்கிழமை நிம்மியம்பட்டு அருகே உள்ள தனியாா் விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்துக் கொண்டாா். தகவலின் பேரில் விரைந்து சென்ற ஆலங்காயம் போலீஸாா் மற்றும் தீயணைப்புத் துறையினா் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். சம்பவம் தொடா்பாக ஆலங்காயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Advertisement