முகப்பு
திருப்பத்தூர்

வாகனம் மோதி முதியவா் பலி

Updated On : 21 மார்ச், 2024 at 11:27 PM
பகிர்:
Updated On : 21 மார்ச், 2024 at 7:00 PM

ஆம்பூா் அருகே இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் முதியவா் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை இறந்தாா். வாணியம்பாடி அருகே வெள்ளக்குட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் ரத்தினம் (62). இவா் புதன்கிழமை மாராப்பட்டு கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றபோது வாணியம்பாடியிலிருந்து ஆம்பூா் நோக்கிச் சென்ற இருசக்கர வாகனம் அவா் மீது மோதியது. அதில் படுகாயமடைந்த அவா் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை காலை இறந்தாா். ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினா்.