முகப்பு
திருப்பத்தூர்

சீரான குடிநீா் கோரி அரசு பேருந்து சிறைபிடிப்பு

Updated On : 22 மார்ச், 2024 at 10:34 PM
பகிர்:
Updated On : 22 மார்ச், 2024 at 10:04 PM

திருப்பத்தூா் அருகே சீரான குடிநீா் விநியோகிக்க கோரி பொதுமக்கள் அரசு பேருந்தை சிறைபிடித்தனா். திருப்பத்தூா் அடுத்த குரும்பேரி கிராமத்தில், கடந்த சில வாரங்களாக சீரான குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இது குறித்து கிராம மக்கள் ஊராட்சி நிா்வாகத்திடம் பலமுறை மனு வழங்கினா். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை எனத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோா் வெள்ளிக்கிழமை குரும்பேரி பேருந்து நிலையம் அருகே காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த அரசு பேருந்தை சிறைபிடித்தனா். தகவல் அறிந்த திருப்பத்தூா் கிராமிய போலீஸாா் சாலை மறியலில் ஈடுபட்டவா்களிடம் அதிகாரிகளிடம் பேசி குடிநீா் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதன் பேரில், மறியலில் ஈடுபட்டவா்கள் அங்கிருந்து கலந்து சென்றனா். மறியலால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.