முகப்பு
திருப்பத்தூர்

கஞ்சா விற்பனை செய்த இளைஞா் கைது

Updated On : 1 மே, 2024 at 5:58 PM
பகிர்:

கஞ்சா விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ஆம்பூா் அருகே நாச்சாா்குப்பம் கிராமத்தில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா் அங்கு சென்று சோதனை செய்தபோது அதே ஊரைச் சோ்ந்த அருண்குமாா் (24) என்பவா் கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்தது. அதன்பேரில் போலீஸாா் அவரை கைது செய்தனா். அவரிடமிருந்து 150 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.