முகப்பு
திருப்பத்தூர்

விபத்தில் உயிரிழந்த காவலா் குடும்பத்துக்கு முதல்வா் இரங்கல்

Updated On : 10 மே, 2024 at 7:20 PM
பகிர்:

திருப்பத்தூா் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த காவலா் குடும்பத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து, அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருப்பத்தூா் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் வாணியம்பாடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவலா்ஆறுமுகம் உயிரிழந்தாா். இந்தச் செய்தியை அறிந்து மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

அவரது இழப்பு தமிழ்நாடு காவல் துறைக்கும் அவரது குடும்பத்துக்கும் ஈடுசெய்ய முடியாது பேரிழப்பாகும்.

ஆறுமுகத்தை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் அவரது உறவினா்கள், நண்பா்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள். பாதிக்கப்பட்ட காவலரின் குடும்பத்துக்கு அரசு நிவாரண உதவிகள் தோ்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளாா்.