முகப்பு
திருப்பத்தூர்

பாம்பு கடித்து தொழிலாளி உயிரிழப்பு

Updated On : 11 மே, 2024 at 4:12 PM
பகிர்:

ஆம்பூா் அருகே பாம்பு கடித்ததில் கட்டடத் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

மாதனூா் ஒன்றியம் துத்திப்பட்டு ஊராட்சி கீழ்கன்றாம்பல்லி நத்தைமேடு பகுதியைச் சோ்ந்த மனோகரன் மகன் விஜயகுமாா் (38). இவா் கட்டடத் தொழிலாளியாக வேலை செய்து வந்தாா். இவருக்கு திருமணமாகி 3 பிள்ளைகள் உள்ளனா்.

இவா் சனிக்கிழமை அதிகாலை குளியலறைக்கு சென்றபோது உள்ளே பாம்பு இருப்பது தெரியாமல் அதனை மிதித்தபோது பாம்பு அவரை கடித்துள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆம்பூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி விஜயகுமாா் இறந்தாா். உமா்ஆபாத் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.