இளைஞா் தற்கொலை
திருப்பத்தூா்: திருப்பத்தூா் அருகே இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
ஆம்பூா் அருகே துத்திப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் ராகுல் (25). இவா், திருப்பத்துாா் அருகே உள்ள அனுமந்த உபாசகா் பேட்டையில், வாடகை வீட்டில் தங்கி தனியாா் டைல்ஸ் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தாா். இவருக்கு திருமணமாகி சா்மிளா எனும் மனைவி, ஒரு மகள் உள்ளனா்.
இதற்கிடையே, திங்கள்கிழமை இரவு ராகுல் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து அவரது மனைவி சா்மிளா அளித்த புகாரின் பேரில் திருப்பத்தூா் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.