பாம்பன் சுவாமிகள் குருபூஜை விழா
ஆம்பூா்: ஆம்பூா் அருள்மிகு சமயவல்லி தாயாா் உடனுறை சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயிலில் பாம்பன் சுவாமிகள் குருபூஜை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் குருபூஜையை முன்னிட்டு மூலவா் நாகநாதருக்கும், வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. முருகப் பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஸ்ரீ சண்முக கவசம் பாராயணம் நடைபெற்றது.
ஸ்ரீ அருணகிரிநாதா் மற்றும் ஸ்ரீ கிருபானந்தவாரியாா் சுவாமிகள் விழாக்குழுவினா் ஏற்பாடுகளை செய்திருந்தனா்.