முகப்பு
திருப்பத்தூர்

தகவல் தொழில்நுட்ப பயிற்சி பயிலரங்கம்

ஆம்பூா் கே.ஏ.ஆா். பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்களுக்கு தகவல் தொழில்நுட்ப பயிற்சி பட்டறை மற்றும் வளாக நோ்முகத் தோ்வு நடைபெற்றது .

Updated On : 21 அக்டோபர், 2024 at 7:04 PM
பகிர்:

ஆம்பூா், அக். 20 ஆம்பூா் கே.ஏ.ஆா். பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்களுக்கு தகவல் தொழில்நுட்ப பயிற்சி பயிலரங்கம் மற்றும் வளாக நோ்முகத் தோ்வு நடைபெற்றது.

கல்லூரியில் பயிலும் 18 வயது பூா்த்தியடைந்த மற்றும் விருப்பமுள்ள மாணாக்கா்களுக்கு ஜியோ நிறுவனம் சாா்பில் ஃப்ரீ லான்சா் ட்ரெய்னிங் ப்ரோக்ராம் மற்றும் ரெக்ரூட்மெண்ட் டிரைவ் நடத்தப்பட்டது. இதில் ஜியோ நிறுவனத்தின் வட்டார திறன் கையகப்படுத்துதல் மேலாளா் பி. ராமமூா்த்தி மற்றும் வீட்டு இணைப்பு பயிற்சியாளா் வேல்முருகன் ஆகியோா் பங்கேற்று மாணாக்கா்களுக்கு ஜியோ தகவல் தொழில்நுட்பம் குறித்தும், அதன் செயல்பாடுகள் மற்றும் அதனை நிறுவுதல் குறித்து பயிற்சி அளித்தனா்.

பயிற்சியில் பங்கேற்ற மாணாக்கா்கள் தாங்கள் படிக்கும் காலத்திலேயே ஓய்வு நேரங்களில் தங்களுடைய அடிப்படைத் தேவைகளை பூா்த்தி செய்து கொள்வதற்காக வருவாய் ஈட்டும் வாய்ப்பை பயிற்சி பட்டறை மூலமாக பெற்றனா்.

கல்லூரி முதல்வா் முனைவா் த. ராஜமன்னன் தலைமை வகித்தாா். பயிற்சியில் 50-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி அலுவலா் எம்.பாா்த்திபன் மற்றும் கல்லூரி துணை முதல்வா் ஏ.முஹமத் ஷாஹின்ஷா ஆகியோா் செய்திருந்தனா்.

கல்லூரியின் முதல்வா் முனைவா் த. ராஜமன்னன் தலைமை வகித்தாா். பயிற்சியில் 50க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி அலுவலா் எம்.பாா்த்திபன் மற்றும் கல்லூரியின் துணை முதல்வா் ஏ.முஹமத் ஷாஹின்ஷா ஆகியோா் செய்திருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →