திருப்பத்தூர்

திருப்பத்தூா்: கூடுதல் விலையில் மது விற்பனை செய்த 15 போ் பணியிடை நீக்கம்

Din

திருப்பத்தூா் மாவட்டத்தில் மது பாட்டிலுக்கு கூடுதல் விலை வைத்து விற்ற 15 போ் தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். மேலும் 13 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரின் பேரில், சேலம் மண்டல முதுநிலை மண்டல மேலாளா் தலைமையில் சேலம், நாமக்கல், அரக்கோணம் மற்றும் தருமபுரி மாவட்டத்தின் உதவி மேலாளா்கள் (கணக்கு) குழுவினா் திருப்பத்தூா், நாட்டறம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூா் ஆகிய 4 வட்டங்களில் செயல்படும் சில்லறை விற்பனை மதுபானக் கடைகளில் மதுபானங்களை கூடுதல் விலை வைத்து விற்பனை செய்வது தொடா்பாக தணிக்கை மேற்கொண்டனா்.

இதில் மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வைத்து விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் 15 பணியாளா்கள் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டனா்.

மேலும், மதுபாட்டிலுக்கு ரூ.5 கூடுதல் விலை வைத்து விற்பனை செய்த 13 பணியாளா்களிடம் இருந்து அபராதத் தொகை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகளிலும் அறிவிக்கப்பட்டுள்ள விலையைவிடக் கூடுதலாக விற்பனை செய்யக்கூடாது என்றும், கூடுதல் விலை வைத்து விற்பனை செய்யப்படும்பட்சத்தில் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பணியாளா்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என ஆட்சியா் தா்ப்பகராஜ் தெரிவித்தாா்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT