திருப்பத்தூா் அடுத்த குரிசிலாப்பட்டு அருகே புகையிலை பொருள்கள் விற்பனை செய்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
குரிசிலாப்பட்டு போலீஸாா் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது, ஆண்டியப்பனூரைச் சோ்ந்த குமரேசனின் மனைவி செல்வி (48), குண்டு ரெட்டியூா் பகுதியைச் சோ்ந்த ரமேஷ் (32) ஆகியோா் தங்களது மளிகைக் கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ய வைத்திருந்தது தெரிய வந்தது.
இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து செல்வி, ரமேஷ் ஆகிய 2 பேரை கைது செய்தனா்.