முகப்பு
திருப்பத்தூர்

மாற்று இடம் கோரி பொதுமக்கள் மனு

Updated On : 19 செப்டம்பர், 2024 at 11:47 PM
மாற்று இடம் வழங்கக் கோரி ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதனிடம் மனு அளித்த பொதுமக்கள்.
பகிர்:

ஆம்பூரில் மாற்று இடம் கேட்டு எம்எல்ஏவிடம் பொதுமக்கள் வியாழக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: ஆம்பூா் சாணாங்குப்பம் கானாறு பகுதியில் சுமாா் 45 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்கள் வசித்து வருகிறோம். இலவச வீட்டு மனை கேட்டு பலமுறை வருவாய் துறையிடம் கோரிக்கை மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் நாங்கள் வசிக்கும் பகுதியிலிருந்து 21 நாள்களுக்குள் காலி செய்ய வேண்டுமென வருவாய் துறையினா் கடந்த ஜூலை மாதம் நோட்டீஸ் அளித்தனா். கூலி வேலை செய்து வரும் நாங்கள் மாற்று இடம் இல்லாததால், எங்களால் ஏற்கனவே வசித்து வரும் இடத்தை காலி செய்ய முடியாத நிலையில் இருக்கின்றோம்.

ஆகவே எங்களுக்கு மாற்று இடத்தை வழங்கி அதில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டித் தர வேண்டும். அதுவரை தற்போது வசிக்கும் இடத்திலிருந்து எங்களை காலி செய்யும் நடவடிக்கையும் நிறுத்தி வைக்க வேண்டும் எனக் கோரி ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதனிடம் பொதுமக்கள் மனு அளித்தனா்.

இதுகுறித்து உரிய ஆய்வு மேற்கொண்டு, வருவாய்த் துறை மூலம் மாற்று இடம் வழங்க ஆவன செய்வதாக எம்எல்ஏ தெரிவித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →