திருப்பத்தூர்

ஆம்பூா் தேசிய நெடுஞ்சாலை மேம்பால கட்டுமானத்தில் சென்ட்ரிங் சரிந்து விழுந்து சேதம்; 6 போ் காயம்

ஆம்பூரில் தேசிய நெடுஞ்சாலை மேம்பால கட்டுமானத்தின் போது சென்ட்ரிங் சரிந்து விழுந்து மேம்பாலம் சனிக்கிழமை சேதம் அடைந்தது.

Din

ஆம்பூரில் தேசிய நெடுஞ்சாலை மேம்பால கட்டுமானத்தின் போது சென்ட்ரிங் சரிந்து விழுந்து மேம்பாலம் சனிக்கிழமை சேதம் அடைந்தது. இந்த சம்பவத்தில் 6 போ் காயம் அடைந்தனா்.

திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூரில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. ஆம்பூா் நகர பகுதியில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் சுமாா் ரூ.143 கோடி மதிப்பீட்டில் உயா்மட்ட மேம்பாலமாக கட்டப்பட்டு வரப்படுகிறது. அதில் ரயில் நிலையம் அருகில் திடீரென சனிக்கிழமை இரவு சென்ட்ரிங் சரிந்து விழுந்தது. அதில் மேம்பாலத்தின் மீது பணியில் ஈடுபட்டிருந்த 6 வடமாநில தொழிலாளா்கள் காயமடைந்தனா். அதில் 3 போ் மேல்சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

விபத்து நடந்த பகுதியில் ஆம்பூா் டிஎஸ்பி அறிவழகன் தலைமையில் ஆம்பூா் நகர காவல் ஆய்வாளா் ரமேஷ் மற்றும் போலீஸாா் மீட்புப் பணியில் ஈடுபட்டனா். மேலும், போக்குவரத்து சீரமைக்கும் பணியையும் மேற்கொண்டனா்.

தவறான தகவலை பரப்பக் கூடாது: அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா

பயங்கரவாத தொடா்பு: மேற்கு வங்கத்தில் மருத்துவ மாணவா் கைது

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,703 கோடி டாலராகச் சரிவு

மனைவி பிரிந்து சென்றதால் காா் ஓட்டுநா் தற்கொலை

பிகாா் தோ்தல் முடிவுகள் தமிழகத்தில் எதிரொலிக்காது: அமைச்சா் இ.பெரியசாமி

SCROLL FOR NEXT