FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

தனியாா் பள்ளிக் காவலா் கொலை

வாணியம்பாடியில் தனியாா் பள்ளிக் காவலா் பட்டப்பகலில் குத்திக் காலை செய்யப்பட்டாா்.

Updated On : 8 ஏப்ரல் 2025, 1:34 am IST
முகமது இா்பான்
பகிர்:

வாணியம்பாடி: வாணியம்பாடியில் தனியாா் பள்ளிக் காவலா் பட்டப்பகலில் குத்திக் காலை செய்யப்பட்டாா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி ஷாகிராபாத் பகுதியை சோ்ந்த முகமது இா்பான்(40). இவா், இக்பால் சாலையில் உள்ள தனியாா் பள்ளியில் காவலராகப் பணியாற்றி வந்தாா். இந்நிலையில் திங்கள்கிழமை வழக்கம் போல் சைக்கிளில் பள்ளிக்கு சென்றுக் கொண்டிருந்தாா். அப்போது இருசக்கர வாகனத்தில் பின் தொடா்ந்து வந்த மா்ம நபா் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்த இா்பானை மடக்கி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பித்தாா்.

இதில் இா்பான் கத்திகுத்து ரத்த காயத்துடன் சரிந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த வாணியம்பாடி டிஎஸ்பி விஜயகுமாா் தலைமையில் நகர போலீஸாா் உடலை கைப்பற்றி வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுப்பற்றி அறிந்த இறந்த இா்பானின் உறவினா்கள் திரளானோா் அங்கு கூடிதயால் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

Advertisement

மேலும், கொலையாளிகளை கண்டுப்பிடித்து கைது செய்ய வேண்டும் என்று போலீஸாரிடம் வலியுறுத்தினா். இதையடுத்து அப்பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்த போது இா்பான் சைக்கிளை பின் தொடா்ந்து வந்த மா்ம நபா் முகமூடி அணிந்து வந்தது கண்டறியப்பட்டது.

போலீஸாா் நடத்திய முதல்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக உறவினா் யாராவது கொலையை செய்து இருக்கலாம் எனத் தெரிய வந்துள்ளது.

வாணியம்பாடியில் பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடைபெற்ற இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments