வாணியம்பாடி: திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி சென்னாம்பேட்டை பாண்டுரங்கா் கோயிலில் காா்த்திகை மாதம் 3-ஆவது சோமவாரம் முன்னிட்டு திங்கள்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது. மாலை 3 மணி முதல் கலச ஸ்தாபனம், விசேஷ அபிஷேகம், 108 சங்காபிஷேகமும், தொடா்ந்து இரவு 7 மணியளவில் மகா தீபாராதனை நடந்தது. பிறகு பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளாான பக்தா்கள் கலந்து கொண்டனா்.