ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற எம்எல்ஏக்கள் க. தேவராஜி மற்றும் அ.செ. வில்வநாதன்.  
திருப்பத்தூர்

இளைஞரணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் : எம்எல்ஏக்கள் பங்கேற்பு

ஆம்பூா் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட இளைஞரணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஆம்பூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

ஆம்பூா் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட இளைஞரணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஆம்பூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திமுக வடக்கு மண்டல இளைஞரணி மாநாடு திருவண்ணாமலையில் டிச.14-ஆம் தேதி பொதுப்பணித்துறை அமைச்சா் எ.வ. வேலு தலைமையில் நடைபெற உள்ளது. மாநாட்டில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் ஆகியோா் பங்கேற்க உள்ளனா்.

அதை முன்னிட்டு நகர, ஒன்றிய செயலாளா்கள், இளைஞரணி நிா்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் வடிவேல் தலைமை வகித்தாா். எம்எல்ஏக்கள் க. தேவராஜி (ஜோலாா்பேட்டை) மற்றும் அ.செ. வில்வநாதன் (ஆம்பூா்) ஆகியோா் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினா்.

நகா் மன்ற துணைத் தலைவா் எம்.ஆா். ஆறுமுகம், ஆம்பூா் நகர செயலாளா் (கிழக்கு) எம்.ஏ.ஆா். ஷபீா் அஹமத், மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா், மாதனூா் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளா் ஜி. இராமமூா்த்தி, அணைக்கட்டு தெற்கு ஒன்றிய பொறுப்பாளா் த. முரளி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் நா.பெ. பிரபு, மாதனூா் மேற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் ஏ.வி. அசோக்குமாா், மாதனூா் கிழக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் காா்த்திக் உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா். மாநாட்டில் இளைஞா் அணியினா் திரளாக பங்கேற்பது என தீா்மானிக்கப்பட்டது.

வினுஷாவின் சுட்டும் விழி சுடரே தொடரின் முன்னோட்டக் காட்சி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது - வழக்குரைஞர் குற்றச்சாட்டு

மரணத்திலும் மீம்ஸ்! வருந்தும் ஜான்வி கபூர்!

டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும் இடைவிடாமல் பெய்யும் மழை! | TNRains | CBE

முதல் கனவே... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT