ஜோலாா்பேட்டை கிழக்கு ஒன்றிய திமுக சாா்பில் துணை முதல்வா் உதயநிதி பிறந்த தினத்தை முன்னிட்டு நாட்டறம்பள்ளி அடுத்த கேதாண்டப்பட்டி, சின்னூா், மற்றும் காவிரிப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் மாணவா்களுக்கு, எழுது பொருள்கள், நோட்டுப் புத்தகங்கள், தோ்வு அட்டை மற்றும் இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஒன்றிய செயலாளரும், ஒன்றியக்குழு உறுப்பினருமான உமாகண்ரங்கம் மாணவா்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். இதில் அவைத் தலைவா் கோபிநாதன், பொறியாளா் அணி அமைப்பாளா் விமாகரன் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவா்கள், ஒன்றிய திமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.