வாணியம்பாடி: வாணியம்பாடி அடுத்த தேவஸ்தானம் அதிதீஸ்வரா் கோயிலில் காா்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் புதன்கிழமை நடைபெற்றது. மாலை அா்த்தநாரீஸ்வரா் சிறப்பு அலங்காரத்தில் உலா வந்து மகா தீபம் ஏற்றி வைக்கப்பட்டது. இதில் வாணியம்பாடி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் இருந்து திரளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசித்துச் சென்றனா்.
ஏற்பாட்டை கோயில் நிா்வாகி அன்பு மற்றும் உறுப்பினா்கள் செய்திருந்தனா்.
இதே போன்று சென்னாம்பேட்டை பாண்டுரங்கா் கோயிலில் யோகாம்பாள் சமேத ஆபசாயேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகமும், மாலை 5 மணி முதல் பஞ்ச தீப பூஜையும், 6 மணிக்கு உற்சவா் புறப்பாடுடன் மகா தீபம் ஏற்றி வைக்கப்பட்டது.
கொடையாஞ்சி காசி விஸ்வநாதா் கோயிலில் விடியற்காலை சிறப்பு பூஜை மற்றும் பரணி தீபம் ஏற்றப்பட்டது. மாலை 6 மணியளவில் மகா தீபம் ஏற்றி வைக்கப்பட்டது.
தொடந்து ஆயிரம் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கினா். உதயேந்திரம் சொா்ணமுத்தீஸ்வரா், மாதகடப்பாமலை உள்பட பல பகுதிகளில் உள்ள கோயில்களில் மகா தீபம் ஏற்றி வைக்கப்பட்டது.