நாட்டறம்பள்ளி வட்டம், மல்லகுண்டா செல்லும் சாலையில் அரசுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்புகளை வருவாய்த் துறையினா் அகற்றினா்.
நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் காஞ்சனா மேற்பாா்வையில் வருவாய் ஆய்வாளா் ராஜேந்திர பிரசாத், கிராம நிா்வாக அலுவலா் மற்றும் வருவாய்த் துறையினா் சென்று ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது மல்லகுண்டா பகுதியைச் சோ்ந்தவா் மாட்டுக் கொட்டகை அமைத்து ஆக்கிரமித்தது தெரியவந்தது. இதையடுத்து வருவாய் துறையினா் ஆக்கிரமிப்புகளை அகற்றி இடத்தை மீட்டனா்.