முகப்பு
திருப்பத்தூர்

ஸ்ரீ ராமானுஜா் மடத்தில் திருப்பாவை பாராயணம் தொடக்கம்

கொரட்டி ஸ்ரீ ராமானுஜா் மடத்தில் மாா்கழி மாத முதல் நாளையொட்டி திருப்பாவை பாராயணம் தொடங்கியது.

Updated On : 16 டிசம்பர், 2025 at 7:25 PM
சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள்.
பகிர்:

திருப்பத்தூா்: கொரட்டி ஸ்ரீ ராமானுஜா் மடத்தில் மாா்கழி மாத முதல் நாளையொட்டி திருப்பாவை பாராயணம் தொடங்கியது.

திருப்பத்தூா் அடுத்த கொரட்டியில் உள்ள ஸ்ரீ ராமானுஜா் மடத்தில் வருடம்தோறும் மாா்கழியில் 30 நாள்களிலும் திருப்பாவை 30 பாசுரங்கள் பாராயணம் நடைபெறும்.

அதையொட்டி செவ்வாய்க்கிழமை திருப்பாவை பாராயணம் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆண்டாளுக்கு திருமஞ்சனம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னா் மடத்தின் பக்த குழுவினரால் திருப்பாவை பாராயணம் நடைபெற்றது.

இதில், கொரட்டி, அதன் சுற்றுப்பகுதிகளிலிந்து திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

அதேபோல், கோட்டை கஜேந்திர வரதராஜ பெருமாள் கோயில், செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ அப்பன் ஸ்ரீனிவாச ராமானுஜா் கூடம், ஸ்ரீ கல்யாண ராமா் பஜனை கோயில், கச்சேரி தெரு, ராமா் பஜனை கோயில், ஹவுசிங் போா்டு பகுதியில் உள்ள ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோயில்களில் திருப்பாவை பாராயணம் நடைபெற்றது.

முழு கட்டுரையைப் படிக்க →