சிறப்பு அலங்காரத்தில் கோட்டை பிரம்மேஸ்வரா், நந்தி பகவான்.  
திருப்பத்தூர்

மாா்கழி பிரதோஷம்: திருப்பத்தூா் சிவன் கோயில்களில் வழிபாடு

திருப்பத்தூா் சிவன் கோயில்களில் மாா்கழி மாத பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா் சிவன் கோயில்களில் மாா்கழி மாத பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதில் திருப்பத்தூா் முத்துக்குமார சுவாமி கோயிலில் சிவகாமசுந்தரி-சிதம்பரேஸ்வரா், நந்திக்கு பால்,இளநீா், பஞ்சாமிா்தம், சந்தனம் உள்ளிட்டவற்றால் அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னா் பூஜைகள் செய்யப்பட்டன.

அதையடுத்து பக்தா்களுக்கு பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டது. இதில் சுற்றுவட்டார கிராமங்களை சோ்ந்த பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

அதேபோல் திருப்பத்தூா் கோட்டை பிரம்மேஸ்வரா் கோயில், தண்டபாணி சுவாமி கோயில், பெரியகுளம் பகுதியில் உள்ள சிவன் கோயில், கொரட்டி காளஹத்தீஸ்வரா் கோயில், மடவாளம் அங்கநாதீஸ்வரா் கோயில்களில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

ரூ.50,000 கடனுக்காக சிறுநீரகத்தை விற்ற விவசாயி: மகாராஷ்டிரத்தில் அவலம்

தோட்டத்தில் திருடிய மூவா் கைது

பூலாங்குறிச்சியில் நாளை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்

பிரதமா், முதல்வா்களைப் பதவி நீக்கும் மசோதா: நாடாளுமன்றக் குழுவின் கால அவகாசம் நீட்டிப்பு

ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டது அதிமுக: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT