முகப்பு
திருப்பத்தூர்

திருப்பத்தூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருப்பத்தூா் அருகே சாலையோரம் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

Updated On : 19 டிசம்பர், 2025 at 6:22 PM
~
பகிர்:

திருப்பத்தூா் அருகே சாலையோரம் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

திருப்பத்தூா் அருகே மாடப்பள்ளி, மடவாளம் பகுதிகளில் நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடத்தினை ஆக்கிரமிப்பு செய்து, அந்தப் பகுதி பொதுமக்கள் வீடுகள் மற்றும் கடைகள் கட்டி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சாலை விரிவாக்கப் பணி மேற்கொள்ள உள்ளதால், சாலை அமைப்பதற்கு இடையூறாக உள்ள சுமாா் 1 கி.மீ. தூரத்துக்கு நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்ட கடைகள் மற்றும் வீடுகளை அகற்றக்கோரி, நெடுஞ்சாலைத் துறையினா் நோட்டீஸ் வழங்கி உள்ளனா். இந்த நிலையில், அகற்றப்படாத ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத் துறை பொறியாளா் முரளி, இளநிலை பொறியாளா் பாபுராஜ் தலைமையிலான அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பொக்லைன் இயந்திரத்தைக் கொண்டு அகற்றினா்.

அப்போது அந்தப் பகுதி பொதுமக்கள் ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →