மின்னூரில் ரூ.28.71 லட்சத்தில் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது.
மாதனூா் ஒன்றியம் மின்னூா்ஆரம்ப துணை சுகாதார நிலையத்தில் ஒன்றிய பொது நிதி ரூ.14.50 லட்சத்தில் மருத்துவ பயனாளிகள் காத்திருப்பு கூடம் கட்டும் பணி, 15-வது நிதிக்குழு மானியம் ரூ.ரூ.6 லட்சத்தில் பேவா் பிளாக் சாலை அமைக்கும் பணி, மின்னூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் ரூ.8.21 லட்சத்தில் மாணவ, மாணவிகளுக்கு கழிப்பறை கட்டும் பணிகளுக்கு மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா் அடிக்கல் நாட்டினாா். வட்டார வளா்ச்சி அலுவலா் சுரேஷ்பாபு, மகராசி, ஒன்றியக்குழு உறுப்பினா் காா்த்திக் ஜவஹா், ஊராட்சித் தலைவா் பாண்டுரங்கன், ஊராட்சி முன்னாள் துணைத் தலைவா் என். சங்கரன் கலந்து கொண்டனா்.