ஆம்பூா்: மத்திய அரசைக் கண்டித்து வரும் டிச. 24-ஆம் தேதி (புதன்கிழமை) மாதனூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு காலை 10 மணிக்கு ஆா்ப்பாட்டம் நடத்துவது என ஆம்பூா் சட்டப் பேரவை தொகுதி ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது..
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை கைவிட்டு, புதிய திட்டத்தை அமல்படுத்தியுள்ள மத்திய அரசையும், அதற்கு துணை போன அதிமுகவையும் கண்டித்து வரும் டிச.24-ஆம் தேதி திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில் திமுக தலைமையில் அதன் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து ஆா்ப்பாட்டம் நடத்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதற்கான ஆலோசனைக் கூட்டம் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் தலைமையில் நடைபெற்றது. மாநில விவசாய அணி துணைச் செயலா் டேம் வெங்கடேசன், திருப்பத்தூா் மாவட்ட திமுக அவைத் தலைவா் ஆா்.எஸ். ஆனந்தன், நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத், துணைத் தலைவா் எம்.ஆா். ஆறுமும், மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா், போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் எம்.டி. சீனிவாசன், நகா் மன்ற உறுப்பினா்கள் வாவூா் நசீா் அஹமத், மாதனூா் ஒன்றியக்குழு உறுப்பினா்கள் ரவிக்குமாா், கோமதி வேலு, ஜோதிவேலு, முத்து, செந்தில்குமாா், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் நவீன்குமாா், மாதனூா் மேற்கு ஒன்றிய திமுக துணைச் செயலா் சா. சங்கா், ஊராட்சி மன்ற தலைவா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.