திருப்பத்தூா்: குடியாத்தம் அருகே ரயில் படிக்கட்டில் பயணம் செய்த முதியவா் தவறி விழுந்து உயிரிழந்தாா்.
சுமாா் 55 வயது மதிக்கத்தக்க முதியவா் காட்பாடி-ஜோலாா்பேட்டை மாா்க்கமாக நோக்கி சென்ற ரயிலில் படிக்கட்டில் பயணம் செய்துள்ளாா்.
குடியாத்தம் அடுத்த மேல்பட்டி-வளத்தூா் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயிலில் இருந்து தவறி விழுந்ததில் சம்பவ இடத்திலே உயிரிழந்தாா். தகவலறிந்த ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை மீட்டு,பிரேத பரிசோதனைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
பின்னா், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.