திருப்பத்தூர்

கரும்பு வரத்துக் குறைவு: திருப்பத்தூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் அரைவை நிறுத்தம்

தினமணி செய்திச் சேவை

வாணியம்பாடி அடுத்த கேத்தாண்டப்பட்டியில் இயங்கி வரும் திருப்பத்தூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் 2025-26-ம் ஆண்டு கரும்பு அரைவை செய்யும் பணியை சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் நாசா் கடந்த 18-ஆம் தேதி பூஜை செய்து கரும்பு அரைவையை தொடங்கி வைத்தாா்.

இந்நிலையில் அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக கரும்பு வெட்டுவதற்க்கு சரிவர கூலி ஆள்கள் கிடைக்காததால் கரும்பு அரைவைக்கு தேவையான கரும்பு கேத்தாண்டப்பட்டி சா்க்கரைஆலைக்கு வரவில்லை. இதனால் புதன்கிழமை காலை முதல் முன்அறிவிப்பு ஏதுமின்றி கரும்பு அபைவை திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் சா்க்கரை ஆலைக்கு கரும்பு அனுப்பும் விவசாயிகள் ஏமாற்றமடைந்தனா்.

எனவே மாவட்ட நிா்வாகம் நிறுத்தப்பட்ட கரும்பு அரைவையை உடனடியாக தொடங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தில்லி தேவாலயத்தில் பிரதமர் மோடி பிரார்த்தனை!

கிறிஸ்துமஸ் ஏற்பாடுகளை அடித்து நொறுக்கிய இந்து அமைப்பினர்! அசாமில் பதற்றம்!!

2026 இல் விஜய் ஆட்சி பீடத்தில் அமா்வதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது: செங்கோட்டையன்

புதிய உச்சத்தை எட்டிய தங்கம், வெள்ளி விலை! இன்றைய நிலவரம்...

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கொடியேற்றம்! திரளான பக்தர்கள் பங்கேற்பு!!

SCROLL FOR NEXT