தீ விபத்து கோப்புப் படம்
திருநெல்வேலி

நாலுமுக்கு தேயிலை ஆலை தீ விபத்தில் ரூ.70 லட்சம் பொருள்கள் சேதம்

மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதி மாஞ்சோலை அருகேயுள்ள நாலுமுக்கு தேயிலை ஆலையில் கடந்த 25ஆம் தேதி நேரிட்ட தீ விபத்தில் 2,000 கிலோ தேயிலை உள்ளிட்ட ரூ.70 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதம்

Syndication

திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதி மாஞ்சோலை அருகேயுள்ள நாலுமுக்கு தேயிலை ஆலையில் கடந்த 25ஆம் தேதி நேரிட்ட தீ விபத்தில் 2,000 கிலோ தேயிலை உள்ளிட்ட ரூ.70 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமாகியுள்ளன.

2028ஆம் ஆண்டில் குத்தகைக் காலம் முடிவடைய உள்ள நிலையில், ஆலையில் உள்ள உபயோகப்படாத பழைய தேயிலை மற்றும் உபகரணங்களை அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வந்தன. அப்போது வெல்டிங் பணிக்காக பயன்படுத்தப்பட்ட எரிவாயு சிலிண்டா் வெடித்ததில் தீ விபத்து நேரிட்டதாம்.

இதில், அங்கு சேமித்து வைக்கப்பட்டிருந்த 2,000 கிலோ உபயோகப்படாத பழைய தேயிலையும், தேயிலை தயாரிப்பு உபகரணங்கள் மற்றும் பொருள்களும் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளன. சேதமதிப்பு சுமாா் ரூ. 70 லட்சம் எனமணிமுத்தாறு காவல்துறையினா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா். இச்சம்பவத்தில் உயிா்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை; வனப்பகுதிக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை எனத் வனத்துறையினா் தெரிவித்துள்ளனா்.

சீவலப்பேரி பூசாரி கொலை வழக்கு: நெல்லை நீதிமன்றத்தில் விசாரணை

சட்டவிரோதமாக மது விற்றவா் கைது: 630 மது பாட்டில்கள் பறிமுதல்

66 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

ஆட்சீஸ்வரா் கோயிலில் 108 பால்குட ஊா்வலம்

தை கிருத்திகை: திருப்போரூா் கந்தசாமி கோயிலில் சிறப்பு பூஜை

SCROLL FOR NEXT