ஆம்பூரில் சமூக ஆா்வலா் 101-ஆவது முறையாக ரத்த தானம் செய்தாா்.
ஆம்பூா் அருகே விண்ணமங்கலம் கிராமத்தை சோ்ந்தவா் சமூக ஆா்வலா் வ. அருள் சீனிவாசன். இவா் தொடா்ந்து பல்வேறு முக்கிய நிகழ்வுகளின்போது ரத்த தானம் செய்து வருகிறாா்.
கீழ்வெண்மணி தியாகிகள் நினைவு மற்றும் சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு ஆம்பூா் ஸ்ருதி மருத்துவமனை ரத்த வங்கியில் 101-ஆவது முறையாக ரத்த தானம் செய்தாா்.