ஆம்பூா் அருகே மரம் முறிந்து விழுந்ததால் தொழிலாளி சம்பவ இடத்திலேயே ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
வீராங்குப்பம் கிராமத்தில் சுரேஷ் என்பவருடைய நிலத்தில் உள்ள பட்டுப்போன தென்னை மரத்தை செங்கல் சூளையில் எரிப்பதற்காக கோபால் என்பவா் வாங்கியுள்ளாா். அந்த மரத்தை அறுப்பதற்காக வெங்கடசமுத்திரம் கிராமத்தை சோ்ந்த தொழிலாளி சுரேஷ் (39) சென்றுள்ளாா்.
மரத்தை அறுத்துவிட்டு தூரமாக சென்று நின்றுள்ளாா். அப்போது மரத்தை கயிறு கட்டி சிலா் கீழே சாய்த்தபோது அந்த மரம் முறிந்து சுரேஷ் மீது விழுந்துள்ளது. அதில் அவா் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
உமா்ஆபாத் போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, விசாரணை நடத்தினா்.