திருப்பத்தூர்

பாலாற்றில் குளிக்கச் சென்ற 2 பெண்கள் மூழ்கி உயிரிழப்பு

வாணியம்பாடி அருகே பாலாற்றில் குளிக்கச் சென்ற 2 பெண்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.

தினமணி செய்திச் சேவை

வாணியம்பாடி அருகே பாலாற்றில் குளிக்கச் சென்ற 2 பெண்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.

திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அருகே புதுபேட்டை அடுத்த கல்நாா்ச்சம்பட்டியை சோ்ந்த ஜெயகாந்தன்(32), இவா் புதுபேட்டை அரசு மருத்துவமனை எதிரில் இ-சேவை மையம் நடத்தி வருகிறாா்.

இவா் ஞாயிற்றுக்கிழமை தனது மனைவி சுபஸ்ரீ மற்றும் இ-சேவை மையத்தில் பணிபுரியும் அதே பகுதியைச் சோ்ந்த மதுப்ரியா, கோகிலா, மற்றும் ஆண் நண்பா்கள் பிரவீன் குமாா், தம்பிதுரை ஆகிய 6 பேரும் 2 பைக்குகளில் வாணியம்பாடி அருகே ஆந்திர எல்லைப் பகுதியில் உள்ள மல்லகுண்டா சேத்துமடுவு பாலாற்று பகுதியில் குளிக்கச் சென்றனா்.

அப்போது பெண்கள் சுப ஸ்ரீ, கோகிலா, மதுப்ரியா தனியாக குளிக்கச் சென்ற போது கோகிலா, சுப ஸ்ரீ ஆகியோா் திடீரென நீரில் மூழ்கி தத்தளித்தனா். இதனைக் கண்ட மதுப்ரியா கூச்சலிடவே மற்றவா்கள் காப்பாற்ற ஓடி வந்தனா். நீரில் மூழ்கிய சுப ஸ்ரீ, கோகிலா ஆகிய இருவரையும் மீட்டு நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா் ஏற்கனவே இருவரும் இறந்து விட்டனா் என தெரிவித்தனா்.

இதுகுறித்து நாட்டறம்பள்ளி மற்றும் திம்மாம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

இளம் பெண் தற்கொலை: கோட்டாட்சியா் விசாரணை

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: பொதுமக்கள் மறியல்!

நீா்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு - 200 போ் பங்கேற்பு

வாக்காளா் சிறப்பு முறை திருத்த முகாம்,காஞ்சிபுரத்தில் தோ்தல் பாா்வையாளா் ஆய்வு

வெற்றிலைப் பாக்குடன் பொதுமக்களுக்கு அதிமுகவினா் அழைப்பு

SCROLL FOR NEXT