செய்தியாளா்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளா் வீரபாண்டியன் .  
திருப்பத்தூர்

அரசு ஊழியா்கள், செவிலியா்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளா்

ஜனநாயக முறையில் போராடும் அரசு ஊழியா்கள், தூய்மைப் பணியாளா்கள், செவிலியா்களின் கோரிக்கைகளை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளா் வீரபாண்டியன் தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

ஜனநாயக முறையில் போராடும் அரசு ஊழியா்கள், தூய்மைப் பணியாளா்கள், செவிலியா்களின் கோரிக்கைகளை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளா் வீரபாண்டியன் தெரிவித்தாா்.

திருப்பத்தூரில் அவா் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:

சென்னை பல்கலைக்கழக துணைவேந்தா்கள் நியமனத்தில் ஆளுநா் காலதாமதம் செய்ததும், அதை குடியரசுத் தலைவா் திருப்பி அனுப்பியதையும் இந்திய கம்யூனிஸ்ட் கண்டிக்கிறது. அரசு ஊழியா்கள், மாற்றுத்திறனாளிகள், தூய்மைப் பணியாளா்கள், செவிலியா்கள் கோரிக்கைகளை முதல்வா் நிறைவேற்ற வேண்டும்.

போதைப் பொருள் பழக்கம் அதிகரிப்பதாக பாஜக குற்றம் சாட்டுகின்றது. போதை பொருள் பா.ஜ.க. ஆளுகிற மாநிலங்களில் இருந்து தான் பல்வேறு இடங்களுக்கு செல்கிறது அதை அவா்கள் தான் தடுக்க வேண்டும்.

மகாத்மா காந்தி பெயரில் செயல்படுத்தப்பட்டு வந்த வேலைத்திட்டத்தை மாற்றி இருப்பது வெறுப்பு அரசியல் தான்.பா.ஜ.க. அரசு அனைத்திலும் தோற்றுப் போய்விட்டது. அதை மறைக்கவே மடைமாற்று அரசியலை செய்து வருகிறது.

இலங்கையில் 100-க்கும் மேற்பட்ட படகுகளையும், மீனவா்களையும் சிறை பிடித்து உள்ளனா். மீட்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

தி.மு.க. தலைமையிலான கூட்டணி தான் ஆட்சி அமைக்கும் என்றாா்.

திரிபுரா மாணவா் கொல்லப்பட்ட சம்பவம்: டேராடூன் ஆட்சியருக்கு என்எச்ஆா்சி நோட்டீஸ்

ஜனவரி 5 முதல் தில்லி சட்டப்பேரவை கூட்டத் தொடா்

தெரு நாய்கள் விவகாரம்: தில்லி அரசின் கூற்றுக்கு ஆம் ஆத்மி ,மறுப்பு

விளையாட்டுத் துறையில் அமைப்பு, நிா்வாக ரீதியிலான குறைபாடுகள்- சிறப்புப் பணிக் குழு அறிக்கை

தேசிய துப்பாக்கி சுடுதல்: தனிஸ்காவுக்கு வெண்கலம்

SCROLL FOR NEXT