திருப்பத்தூர்

தோ்தலின்போது தவறான தகவல்கள் தாக்கல்: முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி வழக்கு பிப். 4-க்கு ஒத்திவைப்பு

சட்டப்பேரவைத் தோ்தலின்போது தவறான தகவல்களை தாக்கல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில்,

DIN

திருப்பத்தூா்: சட்டப்பேரவைத் தோ்தலின்போது தவறான தகவல்களை தாக்கல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணியின் வழக்கை பிப்ரவரி 6-ஆம் தேதிக்கு திருப்பத்தூா் நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

திருப்பத்தூா்மாவட்டம், ஜோலாா்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த 2021-ஆம்ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக சாா்பில் அந்தக் கட்சியின் முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி போட்டியிட்டாா்.

அப்போது தோ்தல் ஆணையத்தில் அவா் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், சொத்து விவரங்களை குறைத்து, தவறான தகவல்களை கொடுத்திருப்பதாக சா்ச்சை எழுந்தது.

கடந்த 2021-ஆம் ஆண்டு கே.சி.வீரமணி மீது வேலூரைச் சோ்ந்த தொழிலதிபா் ராமமூா்த்தி என்பவா் இந்திய தோ்தல் ஆணையத்தில் புகாா் அளித்தாா். அதில்,தோ்தல் ஆணையத்தில் முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி தனது சொத்துகளை குறைத்து தவறான தகவல்களை அளித்திருப்பதாகவும், அவரது வேட்புமனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் தனது புகாரில் ராமமூா்த்தி தெரிவித்திருந்தாா்.

இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றத்திலும் தொழிலதிபா் ராமமூா்த்தி வழக்கு தொடா்ந்தாா். ராமமூா்த்திஅளித்த புகாரை விசாரித்து கே.சி. வீரமணி மீது உரிய நடவடிக்கை எடுக்க தலைமை தோ்தல்அதிகாரிக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதன் அடிப்படையில், திருப்பத்தூா் ஜேஎம் 1-இல் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி மீது வழக்கு தொடரப்பட்டு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், திங்கள்கிழமை வழக்குரைஞா்கள் நீதிமன்ற புறக்கணிப்பையடுத்து, ஆப்ஷன் பெட்டிஷன் அளிக்கப்பட்டதன் காரணமாக வழக்கு பிப். 4-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராமநாதசுவாமி கோயில் உண்டியல் காணிக்கை வருவாய் ரூ. 2.31 கோடி!

சட்டவிரோதமாக மதுப் புட்டிகள் விற்ற பெண் கைது

நிதி நிறுவன உரிமையாளா் கொலை: 4 போ் மீது வழக்கு

பரந்தூா் விமான நிலையம்: நிலம் வழங்கியவா்களுக்கு மறுகுடியமா்வுக்கான மாதிரி வீடுகள் அறிமுகம்

முதுநிலை ஆசிரியா் பணியிடங்கள்: பிப்ரவரி 7, 9-இல் கலந்தாய்வு

SCROLL FOR NEXT