வேலைவாய்ப்பு முகாமில் தோ்வு செய்யப்பட்டவருக்கு பணி நியமன ஆணை வழங்கிய ரோட்டரி சங்க நிா்வாகிகள். 
திருப்பத்தூர்

தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்: 380 பேருக்கு பணி நியமன ஆணை

ஆம்பூா் ரோட்டரி சங்கம் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் 380 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

Din

ஆம்பூா்: ஆம்பூா் ரோட்டரி சங்கம் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் 380 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

ஆம்பூா் இந்து மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்த முகாமிற்கு ரோட்டரி சங்க தலைவா் எஸ்.சசிக்குமாா் தலைமை வகித்தாா். ரோட்டரி சங்க முன்னாள் ஆளுநா் ஸ்ரீதா் பலராமன், மாவட்ட இயக்குநா் ஜி.முருகேஷ் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டனா். ஆம்பூா் இந்து கல்விச் சங்க தலைவா் எம்.ஆா். காந்திராஜ், செயலா் ஏ.ஆா். சுரேஷ்பாபு ஆகியோா் வாழ்த்தி பேசினா்.

முகாமில் சுமாா் 50-க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்கள் பங்கேற்றன. முகாமில் 752 போ் கலந்து கொண்டனா். 525 போ் தோ்வு செய்யப்பட்டனா். முதல் கட்டமாக 380 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

ரோட்டரி சங்க செயலா் ஜி.ரஞ்சித், ஒருங்கிணைப்பாளா் ஏ.ஆா். ரமேஷ்பாபு, இயக்குநா் வசந்த்குமாா், முன்னாள் தலைவா்கள் சி. குணசேகரன், திலீப் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

திருடப்படும் மக்கள் தீர்ப்பு; வாய்திறக்காத தேர்தல் ஆணையம்! - முதல்வர் ஸ்டாலின்

ஸ்மார்ட் வாட்ச்சில் இனி வாட்ஸ்ஆப்பை பயன்படுத்தலாம் - எப்படி?

ஒரு நாள் அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மா விளையாட வாய்ப்பில்லை!

வெற்றி உரையில் நேருவை மேற்கோள்காட்டிய நியூ யார்க் மேயர் ஸோரான் மம்தானி!

தீயவர் குலை நடுங்க வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT