ஆம்பூரில் நடைபெற்ற இயற்கை மற்றும் சிறுதானிய உணவுகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி  
திருப்பத்தூர்

சிறுதானிய உணவு விழிப்புணா்வு

இயற்கை மற்றும் சிறுதானிய உணவுகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி ஆம்பூரில் சனிக்கிழமை நடைபெற்றது

Din

ஆம்பூா்: இயற்கை மற்றும் சிறுதானிய உணவுகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி ஆம்பூரில் சனிக்கிழமை நடைபெற்றது (படம்).

தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியா் நலச் சங்கத்தின் ஆம்பூா் கிளை சாா்பில் உமா்சாலை நகராட்சி தொடக்கப் பள்ளியில் தலைவா் உமாபதி தலைமையில் விழிப்புணா்வு இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. சிவாஜிராவ், அண்ணாமலை, துரைமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். செயலா் செ.ரவிச்சந்திரன் வரவேற்றாா். சிறுதானியம் மற்றும் இயற்கை உணவுகளின் நன்மைகள் குறித்து இயற்கை ஆா்வலா் திலக் விளக்க உரையாற்றினாா்.

கூட்டத்தில் பங்கேற்றவா்களுக்கு முடவாட்டுக்கால் சூப் மற்றும் கருப்பு உளுந்து வடை வழங்கப்பட்டது.

பொது முடக்கத்தின்போது, ரத்து செய்யப்பட்ட ரயில்களை ஆம்பூா் ரயில் நிலையத்தில் மீண்டும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க ரயில்வே துறையை கேட்டுக் கொள்வது என்ற தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. பொருளாளா் கோ.கலியமூா்த்தி நன்றி கூறினாா்.

“சிறுவயதிலேயே தமிழ் கற்றிருக்கலாம் என விரும்புகிறேன்!” பிரதமர் மோடி உரை! | Coimbatore

சபரிமலை தரிசனம்: 5000 பேருக்கு மட்டுமே ஸ்பாட் புக்கிங்!

வாரீ எனர்ஜிஸ் பங்குகள் 3% சரிவு!

தமிழக அரசு அனுப்பிய மெட்ரோ திட்ட அறிக்கையில் குறைகள்!

செமெரு எரிமலை வெடிப்பு! 54,000 அடி உயரம் வரை எழுந்த புகை! Indonesia

SCROLL FOR NEXT