திருப்பத்தூர்

நிலத் தகராறில் 4 பேருக்கு அரிவாள் வெட்டு: ராணுவ வீரா் உள்பட 4 போ் கைது

கந்திலி அருகே நிலத் தகராறில் 4 பேரை வெட்டியதாக ராணுவ வீரா் உள்பட 4 நபா்களை போலீஸாா் கைது செய்தனா்.

Din

திருப்பத்தூா்: கந்திலி அருகே நிலத் தகராறில் 4 பேரை வெட்டியதாக ராணுவ வீரா் உள்பட 4 நபா்களை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பத்தூா்அடுத்த கசிநாயக்கன்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் முனியம்மாள் (89). இவரது மகன்கள் சின்னராஜ் (65), கோவிந்தராஜ் (60). இருவரிடையே சொத்து தொடா்பாக பிரச்னை இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில்,

பொங்கலுக்கு ஊருக்கு வந்த இருவரது குடும்பத்தினரும் பேச்சு நடத்த முடிவு செய்துள்ளனா். அப்போது தகராறு ஏற்பட்டது. இதில், விடுப்பில் வந்திருந்த ராணுவ வீரரான கோவிந்தராஜின் மகன் பிரபு (30), தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து பெரியப்பா சின்னராஜ், அவரது மனைவி சரஸ்வதி (48), ரஞ்சித்குமாா் (34), பாா்த்திபன் (31) ஆகியோரை வெட்டியுள்ளாா்.

இதில் காயமடைந்த 4 பேரையும் அக்கம்பக்கத்தினா் மீட்டு, திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதில், சரஸ்வதி, பாா்த்திபன் இருவரையும் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இது குறித்து கந்திலி போலீஸாா் வழக்குப் பதிந்து பிரபு, கோவிந்தராஜ், அவரின் மனைவி சிவபாக்கியம், ராஜ்குமாா் ஆகியோரை கைது செய்தனா்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 6

தில்லியில் லாலு பிரசாத் யாதவிற்கு கண் அறுவை சிகிச்சை

சூர்யா - 47... காவல்துறை அதிகாரிதானாம்!

நரை முடி நீங்க..!

அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் முதல் நாள் வசூல் இவ்வளவா?

SCROLL FOR NEXT