துத்திப்பட்டு ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ் தலைமையில் நடைபெற்றது.
துணை வட்டார வளா்ச்சி அலுவலா் செபாஸ்டியன், துணைத் தலைவா் விஜய், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா். ஊராட்சி செயலா் பழனி நன்றி கூறினாா். செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து தணிக்கை நடைபெற்றது.
பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குதிரை கால்வாயை சீரமைத்து தர வேண்டும். விபத்துகளை தடுக்க மாநில நெடுஞ்சாலையை அகலப்படுத்தி சாலையின் நடுவே தடுப்புச் சுவா் அமைத்து தர வேண்டும். அம்பேத்கா் நகா் பகுதியில் நூலகம் கட்ட வேண்டும். சாலைகள் தெருக்கள் பெயரை மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கைலாசகிரியில்....
கைலாச கிரி ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்துக்கு ஊராட்சித் தலைவா் ரமணி ராஜசேகரன் தலைமை வகித்தாா்.