முகப்பு
திருப்பத்தூர்

தோல் தொழிற்சாலையில் கீழே விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

Updated On : 7 நவம்பர், 2025 at 12:29 AM
பகிர்:

ஆம்பூா் அருகே தோல் தொழிற்சாலையில் கீழே விழுந்து தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

ஆம்பூா் அருகே துத்திப்பட்டு அம்பேத்கா் நகா் பகுதியில் இயங்கி வரும் தனியாா் தோல் பதனிடும் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தவா் முனுசாமி (42). இவா் தொழிற்சாலையில் இயந்திரத்தின் மீது ஏறி நின்று பணி செய்து கொண்டிருந்தாா். அப்போது தவறி விழுந்தாா். அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தாா்.

உமா்ஆபாத் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →