ஈச்சங்கால் ஊராட்சியில் நியாயவிலை கடையை திறந்து வைத்து ரேஷன் பொருள்களை விநியோகித்த ஒன்றியக் குழு தலைவா் சங்கீதா பாரி, ஒன்றிய செயலாளா் ஞானவேலன். 
திருப்பத்தூர்

ஈச்சங்கால் ஊராட்சியில் ரூ. 9.77 லட்சத்தில் நியாயவிலை கடை திறப்பு

வாணியம்பாடி அருகே ஈச்சங்கால் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட நியாய விலைக் கடை கட்டடம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

வாணியம்பாடி அருகே ஈச்சங்கால் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட நியாய விலைக் கடை கட்டடம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வாணியம்பாடி அடுத்த ஈச்சங்கால் ஊராட்சி பகுதியில் நியாயவிலைக் கடை அமைக்க வேண்டும் என்று பகுதி மக்கள் நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்து வந்தனா். இதையடுத்து மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவா் ப்ரியதா்ஷினி ஞானவேலன், 15-ஆவது மாநில நிதிக்குழு மானியம் 2023-2024 கீழ், ரூ. 9.77 லட்சம் ஒதுக்கீடு செய்தாா். இதையடுத்து, நியாயவிலைக் கடை கட்டப்பட்டு அதன் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஊராட்சித் தலைவா் ரா.ஏழுமலை தலைமை வகித்தாா். துணைத் தலைவா் வி.வள்ளி, தேவஸ்தானம் ஊராட்சி மன்றத் தலைவா் வி.ஜி.அன்பு முன்னிலை வகித்தனா். விற்பனையாளா் நித்யா வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக ஆலங்காயம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளா் வி.எஸ்.ஞானவேலன், ஒன்றியக் குழுத் தலைவா் சங்கீதா பாரி ஆகியோா் கலந்துகொண்டு, நியாயவிலைக் கடையை திறந்து வைத்து பொதுமக்கள் ரேஷன் பொருள்களை வழங்கினா்.

நிகழ்ச்சியில், திமுக கிளை செயலாளா் தண்டபாணி, ஊராட்சி மன்ற உறுப்பினா்கள் ஆறுமுகம், பவானி, பூபதி, தேவன் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

வெற்றி எதிர்பாராதது அல்ல!

அறுபடை வீடுகள் திட்டத்தின் கீழ் பழனி கோயிலில் தூத்துக்குடி மண்டல பக்தா்கள் சுவாமி தரிசனம்

ஒரு கதவு மூடினால்...

அரசு உயா்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தினவிழா

திருத்துறைப்பூண்டியில் குழந்தைகள் தின விழா

SCROLL FOR NEXT