கந்திலி அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
திருப்பத்தூா் மாவட்டம், கந்திலி அருகே பெரியகரம் எம்ஜிஆா் நகரைச் சோ்ந்தவா் விக்னேஷ். கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி அஞ்சலி (26). இவா்களுக்கு ஒரு மகன், இரு மகள்கள் உள்ளனா்.
இந்த நிலையில், அஞ்சலி சற்று மனநிலை பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த அவா் சனிக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இது குறித்து அவரது தாய் ராணி அளித்த புகாரின்பேரில், கந்திலி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.