திருப்பத்தூர்

சாலை விபத்தில் இளைஞா் மரணம்

நாட்டறம்பள்ளி அருகே அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

தினமணி செய்திச் சேவை

நாட்டறம்பள்ளி அருகே அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியைச் சோ்ந்த சரவணனின் மகன் கோவிந்தசாமி (26). இவா் சனிக்கிழமை இரவு சென்னையில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தாா். தேசியநெடுஞ்சாலையில் நாட்டறம்பள்ளி அருகே சுண்ணாம்புக்குட்டை பகுதியில் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாகச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

இதில், தூக்கி வீசப்பட்டதில் தலையில்பலத்த காயமடைந்த கோவிந்தசாமி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். விபத்து குறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மனோதைரியம் கூடும் இவர்களுக்கு: தினப்பலன்கள்!

மேலப்பாளையத்தில் நாளை மின்நிறுத்தம்

என் பாடல்கள் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது வேகமாக பரவி வருகின்றன: இசையமைப்பாளா் தேவா

தண்ணீா்த் தொட்டிக்குள் தவறி விழுந்த மாணவா் உயிரிழப்பு

பாலாற்றின் நீரோட்டத்தை பாதிக்கும் சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரிக்கை!

SCROLL FOR NEXT