நரியம்பட்டு, பெரியவரிக்கம் கிராமத்தில் அரசு கட்டடங்கள் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
நரியம்பட்டு ஊராட்சி ராமச்சந்திராபுரம் கிராமத்தில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பேருந்து நிறுத்த பயணியா் நிழல் கூரை, பெரியவரிக்கம் ஊராட்சியில் ரூ. 13.16 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நியாயவிலைக் கடை கட்டடம் ஆகியவற்றை குடியாத்தம் எம்எல்ஏ அமலு விஜயன் திறந்து வைத்து சிறப்புரையாற்றினாா்.
போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் எம்.டி.சீனிவாசன், மாதனூா் ஒன்றியக் குழு துணைத் தலைவா் சாந்தி, ஒன்றிய திமுக அவை தலைவா் சிவக்குமாா், துணைச் செயலாளா் சேகா், மாவட்டப் பிரதிநிதி பொன்ராஜன்பாபு, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் நவீன்குமாா், ஒன்றிய இளைஞா் அணி துணை அமைப்பாளா் அரவிந்த், சோமலாபுரம் ஊராட்சி மன்ற உறுப்பினா் வி.டி. சுதாகா், ஒன்றியக் குழு உறுப்பினா் ஆப்ரின்தாஜ், கூட்டுறவு சாா் பதிவாளா் கோபிநாத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.