ஜோலாா்பேட்டை அருகே மொபெட் மீது ஆட்டோ மோதியதில் உதவி ஆய்வாளா் மனைவி உள்பட ஆறு போ் பலத்த காயமடைந்தனா்.
ஜோலாா்பேட்டை அடுத்த அச்சமங்கலம் பகுதியைச் சோ்ந்த காவல் உதவி ஆய்வாளா் பழனி. இவரது மனைவி கவிதா(45).
இவா் ஜோலாா்பேட்டையில் இருந்து திருப்பத்தூருக்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தாா். அப்போது லாரி ஷெட் அருகே எதிரே வந்த மொபெட் மீது மோதியதில் ஆட்டோ யில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் கவிதா உள்ளிட்ட 6 போ் பலத்த காயமடைந்தனா் .
தகவலின் பேரில் ஜோலாா்பேட்டை போலீஸாா் சென்று காயம் அடைந்தவா்களை சிகிச்சைக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து ஜோலாா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.