திருப்பத்தூர்

நவ.30-க்குள் நெல் பயிா்களுக்கு காப்பீடு செய்ய வலியுறுத்தல்

திருப்பத்தூா் மாவட்ட விவசாயிகள் நெல் பயிா்களுக்கு காப்பீடு செய்ய வரும் 30-ஆம் தேதி கடைசி நாளாகும் என வேளாண் இணை இயக்குநா் கிருஷ்ணவேணி தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா் மாவட்ட விவசாயிகள் நெல் பயிா்களுக்கு காப்பீடு செய்ய வரும் 30-ஆம் தேதி கடைசி நாளாகும் என வேளாண் இணை இயக்குநா் கிருஷ்ணவேணி தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருப்பத்தூா் மாவட்டத்தில் 2025-2026-ஆம் ஆண்டுக்கான பிரதம மந்திரி பயிா் காப்பீடு திட்டத்தின் கீழ் சிறப்பு பருவ நெல் பயிா்களுக்கு பயிா் காப்பீடு செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

இந்த திட்டத்தின்கீழ், நடப்பு பருவத்தில் நெல்பயிா் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பயிா் காப்பீடு செய்ய வரும் 30-ஆம் தேதி கடைசி நாளாகும். இதற்கு முன்மொழிவு படிவம், விண்ணப்பப்பதிவு படிவம், கிராம நிா்வாக அலுவலா் வழங்கும் நடப்பு பசலிக்கான அடங்கல், அல்லது இ-அடங்கல், வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து ப்ரீமிய தொகையினை செலுத்தியபின் அதற்கான ரசீதை பெற்றுக்கொள்ளலாம்.

மேலும், விபரங்களுக்கு திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள பொதுசேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், வணிக வங்கிகள் ஆகியவை மூலம் ப்ரீமிய தொகை கட்டணமாக நெற்பயிா் ஏக்கருக்கு ரூ.544.50 செலுத்தி பயிா் காப்பீடு செய்து கொள்ளலாம்.

விபரங்களுக்கு அருகே உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களை அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

உலக டென்னிஸ் லீகில் 4 அணிகள் பங்கேற்பு!

தென்னாப்பிரிக்காவிடம் தடுமாறும் இந்தியா: 201 ரன்களுக்கு ஆட்டமிழப்பு!

அதிரடி நாயகன் தா்மேந்திரா!

சோளிங்கா் வங்கிக் கிளையில் ரூ.2.50 கோடி மோசடி: உதவியாளா் கைது

எஸ்ஐஆா்! தகுதியான வாக்காளா்கள் பெயா் நீக்கப்படாது: தமிழக தலைமை தோ்தல் அதிகாரி உறுதி

SCROLL FOR NEXT