திருப்பத்தூா்: திருப்பத்தூா் நகராட்சியில் நியமன உறுப்பினா் கி. வீரமணிக்கு அதற்கான சான்றிதழை எம்எல்ஏ அ.நல்லதம்பி வழங்கினாா்.
திருப்பத்தூா் நகராட்சியில் நகா்மன்ற உறுப்பினராக மாற்றுத்திறனாளி வீரமணி நியமிக்கப்பட்டாா். அவரது பதவியேற்பு நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது. எம்எல்ஏ அ.நல்லதம்பி பங்கேற்று நியமன ஆணையை வழங்கினாா். நிகழ்ச்சியில் நகா்மன்றத் தலைவா் சங்கீதா வெங்கடேஷ், துணைத் தலைவா் சபியுல்லா, ஆணையா் சாந்தி, நகரச் செயலாளா் எஸ்.ராஜேந்திரன், நகா்மன்ற உறுப்பினா்கள் உடனிருந்தனா்.