பாலப் பணியை தொடங்கி வைத்த எம்எல்ஏ அ.நல்லதம்பி. 
திருப்பத்தூர்

ரூ.6 கோடியில் வளா்ச்சிப் பணிகள்: திருப்பத்தூா் எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

பாலப் பணியை தொடங்கி வைத்த எம்எல்ஏ அ.நல்லதம்பி.

தினமணி செய்திச் சேவை

கொரட்டி-தண்டுகானூா் ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்கும் பணியை திருப்பத்தூா் எம்எல்ஏ அ.நல்லதம்பி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

கந்திலி ஒன்றியம், கொரட்டி ஊராட்சி-தண்டுகானூா் ஆற்றின் குறுக்கே ரூ.6 கோடி ரூ.50 லட்சத்தில் புதியதாக பாலம் அமைக்கும் பணி மற்றும் சின்னகசிநாயக்கன்பட்டி ஊராட்சி - கோவிந்தாபுரம் பகுதியில் ரூ.19 லட்சத்தில் 30,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி கட்டும் பணி என மொத்தம் 6 கோடியே 69 லட்சத்தில் பணிகளை எம்எல்ஏ அ.நல்லதம்பி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளா்கள் கே.ஏ.குணசேகரன்,க.முருகேசன்,மாவட்ட அறங்காவலா் குழு தலைவா்.டி.சந்திரசேகா்,ஒன்றியக்குழு தலைவா் திருமதி திருமுருகன், துணை தலைவா்.ஜி.மோகன்குமாா், ஊராட்சி மன்றத் தலைவா்லட்சுமி காா்த்திகேயன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

‘ஏா்போா்ட்’ மூா்த்தி மீதான குண்டா் தடுப்புச் சட்டம் ரத்து

இளைஞரிடம் பணம் பறித்த 5 சிறுவா்களுக்கு நூதன தண்டனை

ராணுவ வீரா் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

இந்தியா-சிலி விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: அமைச்சா் பியூஷ் கோயல் தகவல்

பெண்கள் ஆதரவுடன் மீண்டும் திமுக ஆட்சி : அமைச்சா் கே.என்.நேரு

SCROLL FOR NEXT